வடமாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டுவிட்டு, பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று கூறுகிறீர்கள். இதை உருவாக்கியதே நீங்கள் தான், இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள் தான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்
கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், வடமாநில தொழிலாளர் விவகாரம் ஜனவரியில் இருந்து நடக்கின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்
இதில் மாநில அரசோ, முதலமைச்சரோ கருத்து தெரிவிக்காமல் இருந்து விட்டு, இது பெரிய பிரச்னையாக உருவெடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கின்றனர். வட மாநிலத்தவர் பலர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்கின்றனர். இது போன்ற வீடியோ பரவியதால் வீட்டிற்கு வர சொல்லி பேசுவதால் தொழிலாளர்கள் ஊருக்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிகளவு
இருக்கின்றனர். இந்த பிரச்னையால் டெக்ஸ்டைல் துறையில் பாதிப்பு ஏற்பட்டு
இருக்கின்றது. இந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை. எனவே, கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை மாநில அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்துவதை போல, வடமாநில தொழிலாளர் பிரச்சினையாலும் பாதிக்கட்டும் என்ற தமிழக அரசு இருக்கின்றதா என்று சந்தேகம் இருக்கிறது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
ஆட்சிக்கு ஆபத்து என்ற உணர்வு முதலமைச்சருக்கு ஏற்பட்டால் அதற்கு மூல காரணம்
யார்? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.
தமிழக அமைச்சர்களே பானி பூரி குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள்
குறித்தும் விமர்சனங்கள் வைக்கின்றனர்.வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டு விட்டு, பிரச்னை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று கூறுகிறீர்கள். இதை உருவாக்கியது நீங்கள் தான். இதை சரி செய்ய வேண்டியதும் முதலமைச்சர் தான். அடுத்தவர் மீது பழி போடும் முயற்சியை முதலமைச்சர் செய்யக்கூடாது என கூறினார்.
பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வெளியே போய் இருக்கின்றனர். அவருக்கு சில அரசியல் காரணம் இருக்கலாம். வெளியில் செல்லும் பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜக புதிய நபர்களால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
தமிழக மாணவர்கள் தேர்ச்சியில் குறைவு என சொல்வதற்கு பிரதமரிடம் எதற்கு செல்ல
வேண்டும். மாணவர்களை தயார் படுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கேட்பது சரியானது கிடையாது. மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.