தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒரு பெண்ணாக மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள், ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்று நடிகை சங்கீதா தெரிவித்துளளார்.
.
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் பகுதி, கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் 300 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும், வேஷ்டி, சேலை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர்கள் சேகர் பாபு, செஞ்சி. கே. மஸ்தான், ஆகியோர், இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல் நீங்களும் தளபதி ஸ்டாலின் போல வர வேண்டும் என முதல்வரை பாராட்டி பேசினர். இவர்களை தொடர்ந்து பேசிய நடிகை சங்கீதா, சினிமாவில் கேமரா முன் நடிக்க சொன்னால் தைரியமாக நடிப்பேன், எதற்கும் பயப்பட மாட்டேன் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அரசியல் மேடையில் பெரிய பெரிய அமைச்சர்கள் , தொண்டர்கள் முன் பேசுவது கொஞ்சம் பதற்றமாக தான் இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசியல் என்றாலே புனிதமான வார்த்தை. இது நமக்கென்று இல்லாமல் மக்களுக்காக செய்வது கடவுளுக்கு சமம். தற்போது அரசியல் என்பது கேலி வார்த்தை ஆகி விட்டது. அந்த மாதிரியான நிலைக்கு காரணம், சிலர் அதை கேலி செய்வது தான். இவர்கள் செய்யும் சேவையை நிம்மதியாக செய்ய விட்டாலே போதும். நான் யாரையும் தனிப்பட்டு குறிப்பிடவில்லை. சிலர் ஒருவரை கேலி செய்வதை வைத்து தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். இது மிகவும் கேவலமானது என்றும், 1 முதல் 90 வயது வரை எண்ணுவதற்கே சில நிமிடங்கள் ஆகிறது. ஆனால் மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்காக இவர்கள் 90 நிகழ்ச்சி செய்கிறார்கள் என்றும் பாராட்டி பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலில் பெரிய தலைவர். அவரது அரசியல் பயணம் குறித்து ஒரு கண்காட்சியில் பார்க்க முடிந்தது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில், தற்போது அவரது உழைப்பால் முதலமைச்சராகி இருக்கிறார். அவர் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒரு பெண்ணாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேயராக பிரியா இருக்கிறார். அவர் காரில் வந்து அப்படி இறங்கும் போது பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
பெண்ணாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள். ஆண் குழந்தைக்கு பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்று கூறிய அவர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா