வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், மார்ச் 4ம் தேதி பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு வந்தனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், டிஜிபி, சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், தங்கள் அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கு முன்பாக பீகார் மாநில அரசு பிரதிநிதிகள் தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசின் பொதுத்துறைச்செயலாளர் ஜெகந்நாதன், பீகார் மாநில அதிகாரிகள் தமிழ்நாடு அரசின் சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டங்களை நடத்தி, தொழிலாளர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், பீகார் மாநில தொழிலாளர்களிடம் பேசினோம். தனிப்பட்ட முறையில் அவர்களின் கருத்துகளை கேட்டுள்ளோம். தொழிலாளர்களின் அலைபேசிகளில் எந்தமாதிரி செய்திகள் வந்துள்ளது என்றும் பார்த்தோம். நாங்கள் எதுவும் பிரச்னைகளை சந்திக்கவில்லை என்றே பீகார் மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு தலைமைச் செயலாளர், அதிகாரிகளுக்கு பீகார் அரசு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போலி வீடியோக்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் நடைபெற்ற கொலை நிகழ்வு, ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வு எல்லாம் பரப்பப்பட்டது. நாங்கள் எதுவும் பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றே பீகார் மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர்.
போலி விடீயோக்களால் இடையில் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.