இஸ்லாமியர்களுக்கான 3.5%இடஒதுக்கீடு – அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இடஒதுக்கீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- அமைப்பின் 12-வது தூத்துக்குடி மாவட்ட…

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இடஒதுக்கீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- அமைப்பின் 12-வது தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் அருகே தனியார் தோட்டத்தில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஸாருதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திட வழிவகை செய்யவேண்டும் என்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும் எனவும், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5% இடஒதுக்கீட்டினை அனைத்துத்துறைகளிலும் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஆண்டுதோறும் சிறைச்சாலைகளில் அண்ணா பிறந்தநாளன்று கருணை அடிப்படையில் இஸ்லாமியர் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.