மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சென்னையைப் பொறுத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர், அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதிகளில் மின் விநியோகம் 2 மணிநேரம் தடைபட்டது தற்போது அவையும் சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் சிறிய மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் இருந்தது என்ற அவர், ஆனால் தற்போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்றார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.1440 பேர் பகலிலும், 600 பேர் இரவிலும் மின் விநியோகம் செய்யப் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாகவும், வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்துள்ளது மின்வெட்டு குறித்த புகார்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். 11,200 மெகாவாட் அளவுக்கு தான் நேற்று மின் தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது. எனவே அனல் மின் நிலைய உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மழைக் காலங்களில் பொதுமக்கள் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.