திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கபடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று 2வது நாளாக ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் :கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன்- அமைச்சர் உதயநிதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று கிருஷ்ணம்பாளையம் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவின் பணபலம், அராஜகத்தை எதிர்த்து அதிமுக வேட்பாளர் களம் காண்கிறார். 30 திமுக அமைச்சர்கள் ஒடி ஒடி வேலை செய்கின்றார்கள். ஆட்சியை ஒழுங்காக செய்திருந்தால் என் ஒட வேண்டும்.
செங்கல் வைத்து பிரச்சாரம் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை 11 மருத்துவ கல்லூரி திறந்து உள்ளோம். திமுகவின் பட கம்பெனி சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சி சிறப்பாக நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை. மின்சாரம் கட்டணம் விலை உயர்ந்துள்ளது. அமைச்சரிடம் கேட்டால் மத்திய அரசு காரணம் என கூறுகின்றார்.
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அடியோடு சரிந்துள்ளது. கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் ராணுவ வீரரை அடித்தே கொன்றுள்ளார். பிரியாணி கடைக்கு சென்று மன்னிப்பு கேட்ட முதல்வர் என் கிருஷ்ணகிரிக்கு செல்லவில்லை. எங்கள் கூட்டணி ஜனநாய முற்போக்கு கூட்டணி இங்கு ஜனநாயகம் இருக்கு. திமுகவில் ஜனநாயகம் கிடையாது என அண்ணாமலை கூறினார்.