நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிவிஆர்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பரமேஸ்வரன் ஐயர். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது இவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிவிஆர்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பரமேஸ்வரன் ஐயர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1987-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர் பிவிஆர்.சுப்பிரமணியம். உள்நாட்டு பாதுகாப்பு நிர்வாகத்தில் மிகுந்த திறமை வாய்ந்தவர். ஜம்மு-காஷ்மீரில் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளராக இருக்கும் போது பலரால் கவனம் பெற்றவர். அதற்கு முன்னர் சட்டீஸ்கரில் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பை வகித்தவர்.
அண்மைச் செய்தி: சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர்!
2004-2008ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனி செயலராக பதவி வகித்தவர். உலக வங்கியிலும் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு 2012ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் பதவியில் இருந்தார்.







