கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

மேலும் மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக எனக் கூறிய முதலமைச்சர் , அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.