கல்வி பறிபோன 12 லட்சம் லெபனான் மாணவர்கள்!

மேற்கு ஆசியாவை சேர்ந்த லெபனான் நாட்டில் உள் நாட்டு போர் நடந்ததால் அந்த நாடு ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தது. மேலும், கடந்த ஆண்டு போடப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட…

மேற்கு ஆசியாவை சேர்ந்த லெபனான் நாட்டில் உள் நாட்டு போர் நடந்ததால் அந்த நாடு ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தது. மேலும், கடந்த ஆண்டு போடப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் லெபனான் நாட்டில் 12 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் நாட்டில் நடந்த உள் நாட்டுப் போரின் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார சிக்கலில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்றின் மக்கள் மீதான படையெடுப்பு இன்னும் முடியவில்லை. கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதில் லெபனான் அரசு மட்டும் விதிவிலக்கல்ல, இந்நாட்டில் கொரோனா தொற்றினால் மட்டும் வசிக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 12 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே லெபனான் நாட்டு மக்கள் உள் நாட்டில் நடந்த போரின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டிலிருந்து போடப்பட்ட கொரோனா ஊரடங்காள் மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் அந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க ஏதுவாக செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களை வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக நாட்டின் எதிர்காலத்தை இளம் தலைமுறையினர்தான் தீர்மானிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இளம் தலைமுறையின் கல்வி இழப்பால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் என்று அந்நாட்டின் சமூக நிறுவனங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிப் பேசிய லெபனான் நாட்டின் குழந்தைகள் நலவாரிய இயக்குநர் “ஜெனிபர் மூர்ஹெட்”, “லெபனான் நாட்டுக் குழந்தைகளின் கல்வி கயிற்றில் தொங்கிக் கொண்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய போதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.