வட தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென்மணடலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளிலிருந்து தரைக்காற்று தமிழகத்தை நோக்கி வீசிவருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென்மணடலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் என 26 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 4 முதல் 6 டிகிரி வரை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் அதிகப்படியான அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொது மக்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







