பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள் – வித்தியாசமான முயற்சி என நெட்டிசன்கள் கருத்து!

ஒரு திருமணத்தின் முந்தைய போட்டோ ஷூட்டில் அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட சில வினோதமான புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். வாழ்க்கையில் மறக்க…

ஒரு திருமணத்தின் முந்தைய போட்டோ ஷூட்டில் அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட சில வினோதமான புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டுமகிழ்வது நம் வழக்கமாகிவிட்டது. சமீப காலங்களில் திருமணத்திற்கு முன்பு, பின்பு என பல போட்டோ ஷூட்களை புது திருமண தம்பதியர் எடுத்துவருகின்றனர். அதிலும் பல தீம்களை வைத்து நடத்தப்படும் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் மிகப் பெரிய கிரேஸாக மாறியுள்ளது. அதற்காக புதுமணத் தம்பதிகள் தங்களுக்குப் பிடித்த இடங்களில் வீடியோக்களை படமாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் மிகவும் வித்தியாசமான இடங்கள் மற்றும் பொருள்களில் போட்டோஷூட் செய்கிறார்கள்.

அண்ட் வகையில் தற்போது இணையத்தில் ஒரு ஆணும், பெண்ணும் பாம்பை வைத்து இந்த புகைப்படக் கதையை உருவாக்கியுள்ளனர். திருமணத்திற்கு முந்தையதான இந்த போட்டோ சூட் பலரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது இந்த புகைபபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றன. இவர்களின் இந்த தொடர் புகைப்படங்கள் ஒரு கதையைச் சொல்வதாக இருக்கின்றன. இவர்கள் இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலித்தார்கள் என்பதை சொல்வதுபோல் அந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலில், ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் அந்த மணமகள் சாதாரணமாக உலா வருகிறார். அங்கு அவர் ஒரு பாம்பை பார்க்கிறார். பின்னர் பாம்பு பிடிப்பவரை உதவிக்கு அழைக்கிறார். அப்போதுதான் அவர் அந்த ஆணைச் சந்திக்கிறார். முதலில் பாம்பை பிடித்த அவர் பிறகு அந்த பெண்ணைக் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறார். பின்னர் பாம்பை பிடித்துக்கொண்டு செல்கையில், தன்னை தொடர்பு கொள்ளுமாறு செய்கை காட்டிவிட்டு செல்கிறார். பிறகு இருவரும் போனில் பேசி காதலிக்கிறார்கள். கடைசி புகைப்படத்தில், இரண்டு பாம்புகள் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இது எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/oyevivekk/status/1662463469264994305?s=20

இவர்களின் இந்த புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் இருவரையும் பாராட்டி வருவதோடு, இவர்கள் போட்டுள்ள இந்த பதிவை ஆஸ்கர் விருதில், குறும்பட பிரிவிற்கு பரிந்துரைக்குமாறு பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் ட்விட்டரில் தான் பார்த்ததிலேயே இவைதான் சிறந்த புகைப்படங்கள் என கேலி செய்துள்ளார்.

https://twitter.com/oyevivekk/status/1662463639503380480?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.