“தி லிட்டில் மெர்மெய்ட்” திரைப்படம் திகைப்பூட்டும் வகையில் ரூ.1000 கோடியை நெருங்கி பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் 5வது இடத்தைப் பிடித்தது.
ராப் மார்ஷல் இயக்கியுள்ள ஹாலிவுட் திரைப்படம், ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. 1989ம் ஆண்டு ஜான் மஸ்கர், ரான் கிளமன்ட்ஸ் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படத்தைத் தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏரியல் என்ற கடல் கன்னியின் கதைதான் தி லிட்டில் மெர்மெய்ட். சாகச தாகம் கொண்ட, அழகான இளம் கன்னியான ஏரியல் நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். மேலும் இருவரும் சேர்ந்து வாழ நினைக்கும் ஏரியல் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் திறனைப் பெறுகிறாள்.
இதனால் அவள் வாழ்க்கையையும், அவள் தந்தையின் கிரீடத்தையும் ஆபத்திற்கு உள்ளாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மிகவும் சுவாரஸ்யமாகத் திருப்பங்களைக் கொண்ட படம்தான் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’.
இந்த படம் மே 26-ம் தேதி வெளியானது. அத்துடன் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. திரைக்கு வந்த நாளிலிருந்தே சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், “தி லிட்டில் மெர்மெய்ட்” திரைப்படம் திகைப்பூட்டும் வகையில் $118 மில்லியன் (இந்திய மதிப்பில் 1000 கோடியை நெருங்கியுள்ளது) வருவாய் ஈட்டி, பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் 5வது இடத்தைப் பிடித்தது.