நீட் தேர்வு அரசின் முடிவில்லை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்

நீட்தேர்வு அரசின் முடிவில்லை என்றும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.   மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர்…

நீட்தேர்வு அரசின் முடிவில்லை என்றும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினர். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காந்தி நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்றார். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களையும் சமன் படுத்தவே நீட் தேர்வு என்றார். ஏற்கனவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மீண்டும் சொல்கிறேன் நீட் தேர்வு அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் நீட் தேர்வில் அரசு தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.