படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.
உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து உத்தரவை வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த கூட்டத்திற்கு உறுப்பினர்களின் வருகையை அதிகரிக்க செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மார்ச் 22-ம் தேதியன்று காலை 11.00 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை அந்தந்த ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையில் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் இந்த கிராம சபை கூட்டங்களை மதச் சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நயினார் பத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 6-ம் வகுப்பு மாணவி பவித்ரா படிக்க மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜிடம் கோரிக்கை வைத்தார். வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிக்க சிரமப்படுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கே கூடியிருந்த மாணவர்களிடம் எத்தனை பேர் வீடுகளில் மின்சாரம் இல்லை என கேள்வி எழுப்பினார். கூடியிருந்த அத்தனை மாணவர்களும் கையை உயர்த்தினர். அவர்கள் பள்ளிக்கு வந்துதான் படிப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்
– யாழன்