கோவில்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் கடந்த ஒரு வார காலமாக மோட்டார்கள் பழுதடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந் நிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் குடிநீர் ,கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பழுதடைந்த மோட்டரை சரி செய்து உடனடியாக தண்ணீர் வழங்க கோரியும், குடிநீர் வசதியை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மாணவ, மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர்.
–கோ. சிவசங்கரன்







