டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் 2 பேர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 108-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அபோதாபாத் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இதையும் படியுங்கள் : உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட பகுதிகளான டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். டெல்லியின் ஜாமியா நகர், லால்பாத்நகர், கான் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு காரணமாக சில கட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சமடைந்துள்ளேன். தலைநகர் முழுவதும் பலத்த நடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இந்த அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது.
Tremors last for about 4 minutes. Looking at fans and chandeliers moving on their own, sofas rumbling as if there’s a silent generator beneath it, tells you to move out fast. And we did just that. All quite for now. Back home. Stay safe and take care.
— KhushbuSundar (@khushsundar) March 21, 2023
நிலநடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் தானாக அசைவதைப் பார்த்தபோது, எங்களை வெளியே செல்லச் சொல்வதாக தெரிந்தது. அதைத்தான் நாங்களும் செய்தோம். இப்போது எல்லாம் அமைதியாக இருக்கிறது. நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.