தடுப்பூசிக் கொண்டவர்கள் தலைவலி, காய்ச்சல் வருவதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மகராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவார், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தனது உடலில் கன்னாபின்னாவென்று காந்த சக்தி வந்திருப்பதாகக் கூறுகிறார், ஆச்சரியம் பொங்க!
மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வருபவர் அரவிந்த் சோனர். இவர் சில நாட்களுக்கு முன் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அடுத்த சில நாட்களில் அவர் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு விட்டதாம். அவர் உடலில் எந்தப் பாகத்தில் இரும்பு பாத்திரத்தை வைத்தாலும் அவை டப்பென்று ஒட்டிக்கொள்ளத் தொடங்கின. முதலில் மகிழ்ச்சியாக இருந்த அவருக்கு பிறகு, பயம் தொற்றிக்கொண்டது. மருத்துவரைச் சந்தித் தார். அவர்களுக்கும் இது வியப்புதான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாசிக்கை சேர்ந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்து பார்த்தனர். அவர்களாலும் இது எப்படி என்று அறிய முடியவில்லை. ’இன்னும் ஆராய வேண்டியிருக்கிறது. முழுமையான விசாரணைக்குப் பிற்கே இதுபற்றி தெரிவிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் காந்த சக்தி ஏற்பட்டதாக அரவிந்த சோனர் கூறுவதை, மும்பையை சேர்ந்த ஜே ஜே மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் டட்யாராவே லஹானே மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது, ’உலகம் முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. அதனால், அதற்கும் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது’ என்று தெரிவித்துள்ளார்.