முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தமிழகத்திற்கு 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் !

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் 409 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 1684 டேங்கர்களில் 29185 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாடு ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 7 ரயில்கள் 551 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் பயணத்தில் உள்ளது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜன் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 4584, மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், டெல்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3564 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன்,
ஆந்திராவுக்கு 3364 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவுக்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 2851 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய உலோகத்தூண்!

Gayathri Venkatesan

காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!

Saravana Kumar