முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி நீர்: ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்டா பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கான நாளை மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, முதலமைச்சர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  “தமிழகத்தில்  டெல்டா பகுதி மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீரையே நம்பியுள்ளது. காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். அத்துடன், அடுத்த மாதம் சம்பா பயிரிடுதலும் ஆரம்பிக்கவுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி நீரும், ஜூலை மாதத்திற்கு 31.24 தண்ணீரும் திறந்துவிடப்பட வேண்டும். ஆகவே மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒன்றிய அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:

Related posts

மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba

பாமக தேர்தல் அறிக்கை வரும் 5ஆம் தேதி வெளயீடு?

Gayathri Venkatesan

சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

Karthick