பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாய்களில் மீன்பிடித்தனர். இதேபோல், மணப்பட்டி காளாஞ்சிரங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் வெற்றியூர் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில், காளையார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விரால், கெளுத்தி, கெண்டை, ரோகு, கட்லா உள்ளிட்ட மீன் வகைகள் பொதுமக்களின் வலைகளில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








