“பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!

அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி!

ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.

பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.