“சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க, பசுமைப் புரட்சி அவசியம்” – நயினார் நாகேந்திரன்!

மரக்கன்றுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்திட வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி எக்ஸ் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின், 12 ஆம் ஆண்டு ஆட்சி சாதனைகளை மக்களிடம் விளக்கும் விதமாகவும், இன்றைய உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் விதமாகவும். சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில், மரக்கன்று நடும்விழாவில் கலந்துகொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

உலக மக்களையும், நாம் வாழ்கின்ற பூமியையும் காக்கும் சுற்றுச்சூழல், நம்மைக் காக்கின்ற ஒரு அரணாகும். ஆகவே, அந்த அரணை, நாம் நமது உயிரைப்போல் பேணி பாதுகாக்க வேண்டும். உலகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு, வெப்ப மயமாகுதல் போன்ற இயற்கை இடர்பாடுகளை தாங்கியபடி, மக்கள் கவலையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பானது மனித உயிரினங்களை மட்டுமல்ல, மற்ற ஏனைய உயிரினங்களையும் கடுமையாக தாக்கி வருகின்றன.

சமீப வருடங்களாக, வெப்பமயமாக்கல் உலகெங்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால், காடுகள் வளம்பெற வேண்டும். காட்டு வளத்திற்கு, உலகத்திற்கே ஒர் எடுத்துக்காட்டாய் விளங்கும் தென்அமெரிக்காவின் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுபோல, நமது நாட்டிலும் வளமான காடுகள் வணிகத்திற்காக அழிக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய
குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள காட்டு வளங்கள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கினறன. அவைகளை பாதுகாக்க வேண்டியது, நமது மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல, பாரத மக்களின் மகத்தான கடமையாகவும் கருதுகின்றேன்.

உலகத்தின் நுரையீரலாகவும், மூச்சுக்காற்றாகவும் விளங்கிவரும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி இங்கே தேவைப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. மேலும், உலக மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் விளைவாக வருகின்ற சவால்களை முறியடிக்க வேண்டும். ஆகவே, இதற்கு முன் தாரணமாக பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள், தொண்டுள்ளம் கொண்டுள்ள ஒவ்வொருவரும், தங்கள் வசிக்கும் நகர்புற, கிராமப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நடவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு மரக்கன்று நடுகின்றபோதும், பாரதிய ஜனதாவின் ஒப்பற்றத் தலைவர்களின் திருப்பெயர்களை எழுதி வைத்து, மரக்கன்றுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்திட வேண்டுமெனவும், வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.