முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்

“அந்த குழந்தைகளுக்கு பதிலாக என்னை சுடுங்கள்” என மியான்மர் காவல் துறையினர் முன்பு மண்டியிட்டுக் கெஞ்சும் கன்னியாஸ்திரீயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் அந்நாடு முழுவதும் போர்க் களமாகக் காட்சி அளிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை மியான்மர் ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைப்பதும்,துப்பாக்கியால் சுடுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவில்லை.

இந்நிலையில் வடக்கு மியான்மரியில் மைட்கினாவில் உள்ள கச்சின் பகுதியில் மாணவர் குழுவினர் சிலர் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில். அப்போது அவர்களை துரத்திய காவல் துறையினர் மாணவர் ஒருவரைத் தலையிலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் கன்னியாஸ்திரீ ஆன் ரோஸ் நு தவங் (45)முன்னால் நிகழ்ந்துள்ளது. அந்த பதற்றமான சூழ்நிலையில் என்னச் செய்வதென்று தெரியாமல் இருந்த ஆன் ரோஸ் உடனடியாக மாணவர்களை நோக்கி ஓடிய மியாண்மர் காவல் துறையினர் முன்பு மண்டியிட்டுள்ளார். அப்போது “அந்த குழந்தைகளுக்குப் பதில் என்னை வேண்டுமானாலும் சுடுங்கள், அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்” என கெஞ்சிக் கேட்டுள்ளார்.


ஆன் ரோஸ் இவ்வாறு கூறியதும் மியாண்மர் காவல் துறையினர் இருவர் அவர் முன்பு மண்டியிட்டு வருத்தம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக கன்னியாஸ்திரீ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Gayathri Venkatesan

குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்!

Jeba

நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம்; பிரதமர் மோடி கருத்து!

Saravana