சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

ரஷியாவில் ட்விட்டர், கூகுள், பேஸ்புக் ஆகியவற்றுக்கு எதிராக, ஒவ்வொன்றின் மீதும் தலா மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில், சட்ட விதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், ரூ.39,43,485 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் டிக்டாக் மற்றும் டெலிகிராம் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்யும் முக்கிய விமர்சகரான அலெக்ஸி நவல்னியை, கடந்த மாதம் சிறையில் அடைத்தது தொடர்பாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வந்தன.
இந்த சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷிய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கூகுள்,பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.







