மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து நந்திகிராம் தொகுதிக்கு வந்த அவர், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
இதையடுத்து ஹால்டியாவில் உள்ள நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் மம்தா பானர்ஜி பாத யாத்திரையாக சென்றுள்ளார். பின்னர் தேர்தல் அதிகாரியிடம் அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில், முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்து அதிகாரி வரும் 12ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.







