மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது தவிர்க்கவியலாதது: ராணுவ தளபதி

கடந்த திங்கட்கிழமை மியான்மர் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், முன்னதாக அதிகாலையில் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட என்.எல்.டி (NLD) கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து…

கடந்த திங்கட்கிழமை மியான்மர் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், முன்னதாக அதிகாலையில் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட என்.எல்.டி (NLD) கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து அந்நாட்டின் ராணுவ தலைவர் மின் ஹங் ஹாலிங் “மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது தவிர்க்கவியலாதது” என்று தற்போது கூறியுள்ளார்.

“ஜனநாயகத்தின் 10 ஆண்டுகளின் படிப்பினையில், நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் சிறப்பு அதிகாரங்கள் ஆகியவை ராணுவத்திற்கு திரும்பப்பெறப்படுகின்றன. தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு விரிவான பதிலளிக்காத நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என ஹாலிங் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply