நடிகராக மாறிய மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வீரர்!

லேபிள் இணையத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் நடித்துள்ளார்.  அவரது நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  ‘கனா’,  ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களை அடுத்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘லேபிள்’ (Label) என்ற இணையத்…

லேபிள் இணையத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் நடித்துள்ளார்.  அவரது நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

‘கனா’,  ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களை அடுத்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘லேபிள்’ (Label) என்ற இணையத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த நவ. 10ம் தேதி வெளியானது.  ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பணியாற்றியுள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  கனா படம் மூலம் கவனிக்க வைத்த அருண்ராஜா காமராஜ்,  முதன்முறையாக இணையத் தொடரை இயக்கியுள்ளார்.  மேலும் இந்த தொடரில் நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷங்கர்,  ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர்.  அண்டர் 19 பிரிவில் தேசிய போட்டிகளில் விளையாடிய இவர்,  ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் பகுப்பாய்வளராக பணியாற்றியுள்ளார்.

முதலில்,  தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான ஹரிஷங்கர்,  வெள்ளித்திரையில் மாயத்திரை,  டிரைவர் ஜமுனா,  பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் துணைக் காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.  தற்போது வெளியாகியுள்ள லேபில் சீரிஸில் நடித்துள்ளது அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கிய ஹரிஷங்கர்,  வெள்ளித்திரையில் இளம் நடிகராக தற்போது முத்திரை பதிக்க தொடங்கியுள்ளார்.  இவரது நடிப்புக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.