முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மேட்டூர் அணை உபரி நீரை சேலத்திலுள்ள 100 ஏரிகளில் விடுவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக பதவியேற்றுள்ளது திமுக அரசு என்றார். இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா அமைச்சர்களின் மேற்பார்வையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பது, தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்க்கும் செயல் என குற்றம் சாட்டினார்.

 

மேலும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீர் ஏற்று பாசனம் மூலம் தண்ணீரை திறந்து விடவேண்டும் என கூறினார். இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பூத் வாரியாக வாக்குகளை சேகரிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

Advertisement:
SHARE

Related posts

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!

Niruban Chakkaaravarthi

விவாகரத்து முடிவை கைவிட்டார் நடிகர் நவாசுதீன் சித்திக்

Gayathri Venkatesan

சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து!

Niruban Chakkaaravarthi