நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்

நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு…

நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முழுவதும் சென்னை முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது.

இதனிடையே சென்னையில் இன்று பிற்பகல் முதல் கனமழை சற்று ஓய்ந்து உள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கவுள்ளதால் பலத்த காற்றுடன் சாரல் வீசுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை நெருங்கிய பின் தொடர்ந்து வலுவிழக்கும். இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாகக் குறைய தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.