முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தனர்.







