ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 4வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி கலமிறங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தது.
குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம், சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஒரே போட்டியில் மூன்று சதமடித்த ஒரே அணி மற்றும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா.
கடந்த 2015-ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் எடுத்தது உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்துள்ளது. மேலும் ஐடன் மார்கன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் குறைந்த பந்துகளில் அதிவேக சதமடித்த சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணிகள் (ஒருநாள்):
- 428/5 – தென்னாப்பிரிக்கா – இலங்கைக்கு எதிராக, 2023
- 417/6 – ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2015
- 413/5 – இந்தியா – பெர்முடாவுக்கு எதிராக 2007
- 411/4 – தென்னாப்பிரிக்கா – அயர்லாந்துக்கு எதிராக 2015
- 408/5 – தென்னாப்பிரிக்கா – மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2015
உலகக் கோப்பையில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் (ஒருநாள்):
- தென்னாப்பிரிக்கா – 3 முறை
- இந்தியா – 1 முறை
- ஆஸ்திரேலியா – 1 முறை
ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள்:
- தென்னாப்பிரிக்கா – 8 முறை
- இந்தியா – 6 முறை
- இங்கிலாந்து – 5 முறை
- ஆஸ்திரேலியா – 2 முறை
- இலங்கை – 2 முறை







