50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி,…

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி, நரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தனரா, கிராம புற பகுதிகளில் வெளி நபர்கள் யாரும் வலம் வருகின்றனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.