பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல்…

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரை மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவ மழைக் காலங்களில் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணிப்பதோடு. மாநகராட்சி மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் அந்தந்த துறையைச் சேர்ந்த அலுவலர்களின் தொலைப்பேசி எண்களைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் மேற்பார்வையாளர் மற்றும் செயற்பொறியாளர் என்ற அடிப்படையில் 30 சிறப்பு அலுவலர்கள்.பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளைச் சிறப்பு அலுவலர்கள் மூலம் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னை முழுவதும் நியூஸ் 7 தமிழ் தவிக்கும் தலைநகர் என்ற தலைப்பில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தது. கள ஆய்வின் எதிரொலியாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு நேரடியாகத் தென் சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

மேலும் நியூஸ்7 தமிழின் கள ஆய்வில் அரசுத் துறைகள் உடனான ஒத்துழைப்பு இல்லாததே பணி மெத்தனமாக நடைபெற முக்கிய காரணம் என மக்கள் நேரடி குற்றச்சாட்டு வைத்த நிலையில் குடிநீர் வாரியம் சார்பில் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணிப்பதோடு. மாநகராட்சி மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.