மகளிருக்கான ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி வெற்றது.   மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர்…

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி வெற்றது.

 

மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று நடைபெற்றது. தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, தாய்லாந்து அணியுடன் மோதியது.

பின்னர் பகல் 1 மணிக்கு தொடங்கிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி 76 ரன்களை குவித்தார்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த போட்டியில் ஆட்ட நாயகராக முதல் இன்னிங்சில் 76 ரன்கள் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.