லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!

சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்துசென்ற தாய், மகள் இருவருக்கும் காரில் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஎம்ஆர் பகுதியில் உள்ள கண்ணகி நகரை சேர்ந்த 34…

சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்துசென்ற தாய், மகள் இருவருக்கும் காரில் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒஎம்ஆர் பகுதியில் உள்ள கண்ணகி நகரை சேர்ந்த 34 வயது பெண் மற்றும் அவருடைய 14 வயது மகளும் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அருகே ஒரு கார் வந்து நின்றுள்ளது. தாய், மகள் இருவருக்கும் லிப்ட் கொடுப்பதாகக் கூறி அவர்களை காரினுள் அழைத்துள்ளனர்.

காரில் ஏறிய தாய், மகள் இருவரும் உடனே வீட்டிற்கு போன் செய்து தகவல் கூறியுள்ளனர். பின்னர் காரில் இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (34) மற்றும் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.மனோஜ் (24) ஆகியோர் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்த தகவலை மீண்டும் கணவருக்கு அந்த பெண் கூறியுள்ளார். உடனடியாக ஒஎம்ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை கணவர்,உறவினர்கள் பின்தொடர்ந்துள்ளார். இதனையறிந்த சங்கர், மனோஜ் இருவரும் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தாய், மகளை இறக்கிவிட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு சங்கர், மனோஜ் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.