மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

திட்டம் 81 – 90 81.எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவின் போது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில், சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார் 82.கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து,…

திட்டம் 81 – 90

81.எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவின் போது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில், சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்

82.கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து, கருப்பு பூஞ்சை நோய் விஸ்வரூபமெடுத்த நிலையில், உடனடியாக கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்துகளை வாங்க 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டது.

83.ரேஷன் கடைகளில் புகார்களை பதிவு செய்ய, பதிவேடு வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இணைய வழியில் புகாரை தெரிவிக்க சிரமங்கள் உள்ளதால், பதிவேடு முறையை கடைப்பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது

84.கொரோனா நோய் தடுப்புப் பணியின் போது, திருக்கோயில்கள் சார்பாக, ஏழை மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுமார் 2 கோடியே 51 லட்சத்தை இந்து சமய அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, திருக்கோயில்களுக்கு வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

85.கொரோனா காலத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவை தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக பிற மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட்டது.

86.தக்டே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கியது. கடலோர காவல் படையினர் தேடியும், மீனவர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில், நிவாரண தொகை வழங்கப்பட்டது.

87.அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு, தடையின்றி மதிய உணவு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டது

88.மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த, தமிழ்நாட்டில் உள்ள 58 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

89.சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முடுக்கிவிட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில், தொங்கு பாலம் அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்தார்.

90.அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் அதிரடியாக உத்தரவிட்டார். 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறுப் பேச்சுக்களுக்காக, அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் ஆணையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-7.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”left”]திட்டம் 71 – 80[/penci_button]

[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-9.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”right”]திட்டம் 91 – 100[/penci_button]

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.