திட்டம் 91 – 100
91.கொரோனா நிதி உதவி வழங்கிய சிறுவனுக்கு முதலமைச்சர் சைக்கிள் வாங்கி கொடுத்த நிகழ்வு பெரும் கவனம் ஈர்த்தது. கொரோனா நிதிக்காக செயினை அனுப்பி வைத்த பெண்ணுக்கு, வேலை கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
92.கொரோனா தடுப்பூசி நெருக்கடியைச் சமாளிக்க உலகளாவிய டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் முயற்சியை பலரும் பாராட்டினர்
93.கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்திட சென்னை மீனம்பாக்கத்தில் 70 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. நிதி அறிக்கையில் சித்தா பல்கலைக்கழகம் தொடங்கப்படும் எனவும் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
94.OBC பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவின் பின்னணியில் தமிழ்நாடு அரசு இருப்பதாக பேசப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா, கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்
95.எம்பிபிஎஸ், பல் மருத்துவம் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. திமுக, பாமக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முன்னெடுப்பும், அழுத்தங்களுமே இதற்கு காரணம் என பேசப்பட்டது
96.பெரிய அளவிலான பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என ஒவ்வொரு துறைக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக எடுத்துரைத்து நடவடிக்கையை முடுக்கிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
97.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமரை நேரில் சந்தித்த போதும், இதுதொடர்பாக வலியுறுத்தி மனு அளித்தார்
98.தொல்லியல் ஆய்வை அறிவியல் ரீதியில் மேம்படுத்திட, நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தது. மேலும் அருங்காட்சியகம் அமைப்பதுடன் தமிழர் நாகரீகத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், அடுத்தடுத்த ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்தது தமிழர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது
99.திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் தொடங்கி, இன்றுவரை அமைச்சர்கள் ஒவ்வொருவரும் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் என ஒவ்வொருவரும் கடந்த 100 நாட்களில் தங்களது பணியை திறம்பட செய்தனர்.
100.ஒட்டுமொத்தமாக 100 நாட்களில் முத்தான பல திட்டங்களை செயல்படுத்திய தமிழ்நாடு அரசு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற திமுக அரசின் குறிக்கோள் விரைவில் எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-8.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”left”]திட்டம் 81 – 90[/penci_button]







