முக்கியச் செய்திகள் தமிழகம்

பாரம்பரிய பனை தொழிலுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழில், அழிவை நோக்கி செல்வதாகவும் அதை நம்பி பிழைத்தவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பல வருடங்களாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது பனை மரங்களைப் பாதுகாக்கவும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் பட்ஜெட்டில் அதிரடி திட்டங்களை அறிவித்தார்.

பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என்றும், பனை மரங்களை வெட்ட, மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப் படும் என்றும் ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப் படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமான பனை வெல்லம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

பனை கருப்புக் கட்டி தயாரிக்க நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொந்த ஆயுதங்களை வைத்து எதிர்காலங்களில் போரிடுவோம்: இந்திய கடற்படை

G SaravanaKumar

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்

G SaravanaKumar

பில்கிஸ் பானு வழக்கில் நான் விசாரிப்பதை தடுக்க நினைக்கிறீர்களா..? – உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் சரமாரி கேள்வி

Web Editor