திட்டம் 61 – 70
61.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகா முயற்சித்து வரும் நிலையில், தமிழர்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து, அழுத்தம் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் முழு உரிமை கொண்டது என தெரிவித்தார்.
62.டெல்டா விவசாயிகளின் நலனுக்காக, 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது
63.திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்குகள், உலர் களங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 10 வட்டாரங்களில், 24 கோடியே 30 லட்சம் மதிப்பில் 16 ஆயிரம் டன் கொள்ளளவுடைய கிடங்குகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது
64.ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த காலங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுருத்தினார்
65.ஓய்வுப்பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான, நிலுவைத் தொகையை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டதும் பெரும் வரவேற்பை பெற்றது. 2 ஆயிரத்து 457 ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 497.32 கோடிக்கான பண பலன்களை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார்
66.கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட, 5 சவரன் நகை கடன்கள், விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். எனினும் அதில் சிக்கல்களை ஆய்வு செய்தபிறகு நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்தது.
67.எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது, முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்
68.அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் என முதலமைச்சர் பேசியது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
69.ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் 3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தது அமலுக்கு வந்தது
70.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 20-ம் தேதி “முதலீட்டாளர்களின் முதல் முகவரி” விழா நடைபெற்றது. 49 திட்டங்களின் மூலம் 28 ஆயிரத்தி 508 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-5.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”left”]திட்டம் 51 – 60[/penci_button]
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-7.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”right”]திட்டம் 71 – 80[/penci_button]







