முக்கியச் செய்திகள் தமிழகம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

திட்டம் 51 – 60

51.வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார். சீர்மரபினருக்கு 7 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

52.தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. அதேபோல் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்தும் அரசு உத்தரவிட்டது.

53.முதலமைச்சராக பொறுபேற்ற பிறகு, முதல் முறையாக ஜூன் மாதம் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறவேண்டும், உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

54.நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இக்குழு, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டு, ஜூலை 14 அன்று 165 பக்கம் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்

55.பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார். பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறை, கல்வியாளர், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கவும், மாணவ, மாணவிகள் புகாரளிக்க ஹெல்ப்லைன் எண் உருவாக்கவும் உத்தரவிட்டார்.

56.OBC பிரிவுக்கான சாதிச்சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இருந்தாலும், அவர்களுக்கான சாதிச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடது எனஅரசு ஆணையிட்டது.

57.மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் பெயரில், மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 70 கோடி செலவில், நவீன வசதிகளுடன் கூடியவகையில், நூலகம் அமைக்கப்பட உள்ளது

58.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பை வெகுவிமரிசையாக நடத்திக்காட்டினார் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் படத்தை திறந்துவைத்தார்.

59.சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். 250 கோடி ரூபாய் செலவில், 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக அமைய இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

60.குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமை மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது. திட்டமிட்டபடி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தது விவசாயிகளின் வரவேற்பை பெற்றது.

திட்டம் 41 – 50 திட்டம் 61 – 70
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை: போலீஸ்காரர் கைது

Halley Karthik

ஓமிக்ரான் அச்சுறுத்தல்; கட்டுப்பாடுகளை திருத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

Halley Karthik

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

EZHILARASAN D