முக்கியச் செய்திகள் தமிழகம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

திட்டம் 71 – 80

71.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, கடன் தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கவேண்டும் என பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தொழில் நிறுவனங்களுக்கு, கடன் தவணை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

72.கொரோனாவால் 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே தமிழ்நாடு அரசு இம்முடிவை எடுத்தது.

73.நீர்வளத்துறை உருவாக்கம் போன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி கவனம் ஈர்த்தது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை அடுத்து, முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்

74.பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விலக்கு அளிக்க முதலமைச்சர் வலியுறுத்தியதை அடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்

75.அணைகள் இல்லா மாவட்டங்களில், புதிய தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

76.முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், பொதுமக்கள் தங்களது புகாரை அளிக்க வழிவகை செய்யப்பட்டது.

77.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, வீரர்களை உற்சாகப்படுத்தினார் முதலமைச்சர். சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக வீரர் வீராங்கனைகள் 11 பேருக்கும் தலா 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

78.ஒலிம்பிக் வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவரின் குடும்பச்சூழலை கருதி, அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக 11 பேர் கலந்துகொண்ட நிலையில், வறுமையை கருத்தில் கொண்டு இருவருக்கும் வேலை வழங்க உத்தரவிட்டார்.

79.பூங்கொத்து வேண்டாம், புத்தகம் போதும் என கூறி அதையே செயல்படுத்தி, புதிய வழக்கத்துக்கு அடிகோலினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புத்தகங்கள் வழங்கியதுடன், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் புத்தகம் வழங்கினார்

80.ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு, முதலமைச்சர் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நிதி பாற்றாக்குறையால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதை அடுத்து உடனடியாக நிதியுதவி வழங்கப்பட்டது.

திட்டம் 61 – 70 திட்டம் 81 – 90 Advertisement:
SHARE

Related posts

முதல்வர், மு.க. ஸ்டாலின், சீமான் வேட்புமனுக்கள் ஏற்ப்பு!

Gayathri Venkatesan

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Jayapriya

மருத்துவமனை ஊழியர் பணி நீக்கத்திற்கு நடிகர் அஜித் காரணமா?

Gayathri Venkatesan