திட்டம் 41 – 50
41.தமிழுக்கும் தமிழர்க்கும் இருந்த தடைகளை உடைக்கும் வகையில், திமுக அரசு பொறுப்பேற்ற சில தினங்களில், அரசு அலுவலகங்களில் மீண்டும் தமிழ் வாழ்க என்ற பெயர் மின்னொலியில் ஜொலித்தது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க, தமிழ் வளர்க’ என்ற பெயர் பலகை மீண்டும் பொருத்தப்பட்டது
42.மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திருக்குறளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய, திருக்குறள் தெளிவுரையுடன், பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
43.ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அரசு அறிவித்தது. போராட்டத்தில், பாதிக்கப்பட்ட 93 பேருக்கு, தலா ஒரு லட்சம் நிவாரணம், சிறையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
44.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்கி தமிழ்நாடு அரசு கனிவு காட்டியது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், காயமடைந்தவர்கள் என 17 பேருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
45.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், 11 மாவட்டங்களுக்கு, பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து வரலாற்றில் இடம்பிடித்தது தமிழ்நாடு அரசு. மேலும், 38 மாவட்ட ஆட்சித்தலைவர்களில், 11 பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்களை நியமித்தது பொதுமக்களின் வரவேற்பை பெற்றது.
46.தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு, அரசின் சார்பில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
47.தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான, தோழர் என்.சங்கரய்யாவுக்கு நடப்பாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது
48.தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே, அரசு வேலையில் முன்னுரிமை என அறிவித்து தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
49.பாடப் புத்தகங்களில் தலைவர்கள், சாதனையாளர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்களை நீக்கியதும், தமிழ்நாடு அரசின் தனித்துவமிக்க நடவடிக்கையாக பாராட்டப்பட்டது.
50.சேலம் எட்டு வழிச்சாலை திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மீத்தேன், நியூட்ரினோ ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-3.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”left”]திட்டம் 31 – 40[/penci_button]
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-5.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”right”]திட்டம் 51 – 60[/penci_button]







