திட்டம் 31 – 40
31.கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டது. இதனை மீறி மருந்துக் கடைகளில், அதிக விலைக்கு சானிடைசர், முகக்கவசம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
32.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டது. ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு, 3 ஆயிரம் ரூபாயும், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு 7 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
33.கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவிடும் வகையில், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2 கோடியே 9 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர்.
34.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், தமிழ்நாடு அரசு, கனிவுடன் பரிசீலித்து நிவாரண நிதி வழங்கியது. முகாமிற்கு வெளியே வாழும் 13 ஆயிரத்து 553 குடும்பங்களுக்கு, 5 கோடியே 42 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய், நிவாரண நிதி வழங்கும் ஆணையை பிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
35.கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது
36.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களை, ஆன்லைனில் அரசு வெளியிட்டு மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றது. கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள், கோயில்களின் நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் இணையத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது
37.கோயில்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்டது.
இந்து சமய அறைநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் விரைவில் மீட்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்தது
38.தமிழ்நாடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தையும் அதிரடியாக தொடங்கிவைத்து ஆன்மிக பற்றாளர்களின் நம்பிக்கையை பெற்றது தமிழ்நாடு அரசு. முதற்கட்டமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு நடத்தப்பட்டது.
39.மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டு, வரலாற்று ஆய்வாளர்களின் வரவேற்பை பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், கொரோனாவால் அடுத்தாண்டு முதல் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது
40.அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி, ஆகம விதிப்படி பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. பெண்கள் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-2.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”left”]திட்டம் 21 – 30[/penci_button]
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-4.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”right”]திட்டம் 41 – 50[/penci_button]







