முக்கியச் செய்திகள் தமிழகம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

திட்டம் 11 – 20

11.முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநில வளர்ச்சிக் கொள்ளைக்குழு மாற்றி அமைக்கப்பட்டது. துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனை முதலமைச்சர் நியமித்தார். பேராசிரியர் ராம சீனுவாசன், திருநங்கை நர்த்தகி நடராஜன் உள்ளிட்ட 8 பேரை உறுப்பினர்களாக நியமித்ததும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

12.5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசகர் குழுவை நியமித்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. பொருளாதார வல்லுநர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் நியமிக்கப்பட்டது, சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

13.வளர்ச்சிக்கொள்கை குழு, பொருளாதார ஆலோசகர் குழுவை நியமித்த தமிழ்நாடு அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, நிதிநிலையை வெளிப்படுத்தியது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்டவை கடனில் சிக்கித் தவிப்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

14.தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 5 லடசத்து 70 ஆயிரத்து 189 கோடியாக உள்ளது என்றும், புள்ளிவிவரங்களுடன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

15.ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள்ளாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் முறையாக குறுங்கணினியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு புதிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

16.நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் செம்மொழி விருது, காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சிங்கார சென்னை திட்டம், சித்தா பல்கலைக்கழகம், ஸ்மார்ட் வகுப்பறை, தொழில்பூங்காக்கள் அமைப்பு என அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன.

17.தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக, திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் அறிக்கையிலேயே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்த நிலையில், அதனை நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

18.கொரோனா 2ம் அலை நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு நெருக்கட்சிகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், நேரம் காலம் பார்க்காமல், அமைச்சர்கள் பணியாற்ற வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவால், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு

19.கொரோனா பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், தலா 5 லட்சம் நிதி வங்கி வரவாக வைக்கப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது, வட்டியோடு வழங்கப்படும் எனவும் அறிவித்தார் முதலமைச்சர்

20.கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு, தலா 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாதந்தோறும் மூன்றாயிரம் வழங்கப்படும் என்றும், கல்விக் கட்டணங்களை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்

திட்டம் 01 – 10 திட்டம் 21 – 30

 

Advertisement:
SHARE

Related posts

கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறைவு

Saravana Kumar

கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

Gayathri Venkatesan

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கும் அனுமதி!

Saravana