பொறுப்பேற்ற 100 நாட்களில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட திட்டங்கள்.
- 2021 சட்டப்பேரவைத் தேர்தல், திமுகவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை கனக்கச்சிதமாக கைப்பற்றி, அரசியல் வியூகத்தால் அரியணையில் அமர்ந்தது திமுக. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கு, நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலும் திருப்புமுனையாக அமைந்தது.
- கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த நிலையில் அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பலர் கருத்து தெரிவிக்க, ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது என பலர் கருத்து தெரிவித்தனர். அனைவரின் கருத்தையும் பொய்யாக்கி ஆட்சியில் அமர்ந்தார் மு.க.ஸ்டாலின்.
- முதலமைச்சராக மே 7ம் தேதி பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என குறிப்பிட்டது, திமுகவினரின் கொண்டாட்டத்துக்கு வழிவகுத்தது. கடந்த கால அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் முன் வரிசையில் இடமளித்து தனித்துவ அரசியலை தொடங்கினார் ஸ்டாலின்.
- முதலமைச்சராக பொறுபேற்ற உடனே, ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டு, அரும்பெரும் திட்டங்களை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். முதல் கையெழுத்தாக 2.7 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகையாக, ரூபாய் 4 ஆயிரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.
- அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்திற்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை, அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
- அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுடன் உதவியாளர் ஒருவர் பயணிக்கலாம் என்றும் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் நல்லக்கண்ணு, சங்கரய்யா உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துப்பெற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்தது அரசியலில் பாராட்டப்பட்டது
- தேர்தல் பரப்புரையின் போதே, தாம் ஆட்சிக்கு வந்தால், மக்களின் குறையை தீர்க்க, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார் மு.க.ஸ்டாலின். ஆட்சிப்பொறுப்பேற்றதும், ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதிஷை சிறப்பு அதிகாரியாக நியமித்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடங்கப்பட்டது
- ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறைக்கு, தனி ஐஏஎஸ் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்ட போதே, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இத்துறையின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட, சுமார் நான்கரை லட்சம் மனுக்களில் 3 லட்சத்து 66 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டது அரசின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
- திமுக தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டதும் கவனம் ஈர்த்தது.
[penci_button link=”https://news7tamil.live/mkstalin-government-complete-100-days-in-tamilnadu-1.html” icon=”fa fa-address-book” icon_position=”left” align=”right”]திட்டம் 11 – 20[/penci_button]







