திட்டம் 21 – 30
21.கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், கொரோனாவால் உயிரிழந்த ஊடகத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
22.மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க மாவட்டம் தோறும் WAR ROOM அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்டவாரியாக தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டது. இதன்மூலம் கொரோனா அவசர உதவிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.
23.கொரோனாவை கட்டுப்படுத்த வார் ரூம் உருவாக்கப்பட்ட நிலையில், நள்ளிரவிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சரே பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலம் உறுதி அளித்தது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைந்தது.
24.ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதுதொடர்பாக மே 29-ம் தேதி அரசாணை வெளியிட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்புக் குழுவும் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
25.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் கவச உடை அணிந்து பார்வையிட்டார். அவர் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தது, பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
26.ரெம்டெசிவர் மருந்துக்காக கால்கடுக்க மக்கள் காத்திருந்த நிலையில், மருந்தை நேரடியாக மருத்துவமனைகளுக்கே வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர். ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி, விலையை உயர்த்தி விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
27.பொதுமுடக்கத்தின் போது மக்கள் உணவுப்பொருள் கிடைக்காமல் அல்லபட கூடாது என்பதற்காக, அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களை வீடுதேடிச்சென்று வழங்க நடவடிக்கை மேற்கொண்டது மக்களின் பாராட்டை பெற்றது. நடமாடும் மளிகை மற்றும் காய்கறி திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், மருந்து பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
28.கொரோனா பாதித்து உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், ஊக்கத்தொகை வழங்கவும் ஆணையிட்டார்.
29.கொரோனாவுக்கு தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்கும் வகையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஏற்று நடத்த முதலமைச்சர் முன்வந்தார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், மத்திய சுகாதாரத்துறையிடமும் வலியுறுத்தப்பட்டது.
30.நாட்டிலேயே முதல் முறையாக “மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், காசநோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று, சிகிச்சை வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
திட்டம் 11 – 20 திட்டம் 31 – 40