தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2 வது அலை மிரட்டும் வகையில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி காலை முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்வதாக இன்றும் நாளையும் அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 24 மணி நேர பேருந்து பயணத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்னப்பன், இன்றும் நாளையும் பேருந்துகளை இயக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மக்களுக்கு எந்தவித கஷ்டங்களும் ஏற்படாத வகையில் பேருந்து சேவை இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகவும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்