நீர் இன்றி அமையாது உலகு என அக்காலத்திலேயே திருக்குறள் வாயிலாக சொல்லிவிட்டுச் சென்றார் திருவள்ளுவர். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தண்ணீரின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த கோடை காலத்தில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒவ்வொருவரின் பைகளிலும் தாகத்தின் தேவை கருதி ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம்.
நம் தாகத்தின் தேவையை முதன்மை சேவையாகக் கொண்டு 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது WaterOnClick.com நிறுவனம். தமிழகத்தின் முன்னணி தண்ணீர் (Packaged Drinking Water) விநியோகம் செய்யும் நிறுவனமாக உள்ளது. 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களையும், மற்ற தண்ணீர் பாட்டில்களையும் வாடிக்கையாளர்களின் ஆர்டரின்படி டெலிவரி செய்து வருகிறது.
நீங்கள் எங்கு இருந்தாலும் WaterOnClick.com இணையதளத்தில் (Website) ஆர்டர் செய்தால் போதும் உங்களின் வீட்டிற்கே தண்ணீர் கேன், தண்ணீர் பாட்டில்கள் வந்துவிடும். இப்போது இந்த முறை விரிவுபடுத்தப்பட்டு மொபைல் ஆப் (Mobile App) வரை வந்துள்ளது. மொபைல் ஆப்பிற்குள் சென்று உங்களுக்கு விருப்பமான பிராண்ட் அல்லது விற்பனையாளரை தேர்வு செய்து எவ்வளவு வேண்டும் என ஆர்டர் செய்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதே நாளில் டெலிவரி செய்யப்படும்.
இதற்கு நீங்கள் உங்கள் டெபிட் | கிரெடிட் மற்றும் நெட் பேங்கிங், யுபிஐ முறையில் பணம் செலுத்தலாம். பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் ஆர்டருக்கான தொகையை செலுத்தலாம். வாடிக்கையாளர்களின் ஆர்டர் அடிப்படையில் விநியோகஸ்தர் அல்லது விற்பனையாளர் தங்களது சொந்த வாகனத்தில் வந்து தண்ணீர் டெலிவரி செய்து விடுவார்கள்.
WaterOnClick.com நிறுவனத்தின் மூலம் தண்ணீர் ஆர்டர் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் கீழே குறிப்பிட்டுள்ளோம். பல்வேறு பிராண்ட்களின் தண்ணீர் பாட்டில், கேன்களை நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். அனைத்து விலையிலும் தண்ணீர் உள்ளன. தண்ணீர் பாட்டில்கள் 300 ml ரூ.5 மற்றும் 1 ltr ரூ.10 மட்டுமே. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை தண்ணீர் கேன் | பாட்டில் ஆர்டர் செய்யும்போதும் 100% உத்தரவாதத்துடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படும், அதை வைத்து இணையதளத்தில் மற்ற பொருட்களை வாங்கும்போது தள்ளுபடி அளிக்கப்படும். ஒவ்வொரு முறை நீங்கள் தண்ணீர் வாங்கும்போதும் ரிவார்ட் புள்ளிகள் அளிக்கப்படும். அதற்கு தகுந்த மதிப்பீட்டில், நீங்கள் பின்னர் வீட்டு உபயோக பொருட்கள் அல்லது அந்த மதிப்பீட்டில் மறுபடியும் தண்ணீர் பாட்டில், கேன்களை வாங்கிக்கொள்ளலாம். உங்கள் நண்பர்கள், உறவினர்களை WaterOnClick.com-க்கு அறிமுகம் செய்து ரூ.100 போனஸ் பெற்றுக்கொள்ளலாம்.
தண்ணீர் கேன் | பாட்டில்களை இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஆர்டர் செய்யலாம். 125+ பிராண்ட்கள், 200+ விற்பனையாளர்கள், சென்னை உள்பட 16 நகரங்களில் WaterOnClick.com சேவை பரந்து விரிந்து கிடைக்கிறது. உங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையத்தையும் (044-40047777, 9600123000) உருவாக்கியுள்ளது. தண்ணீரை வாங்குங்கள், சேமியுங்கள், நல்வாழ்க்கை வாழுங்கள்.
இணையதளத்தில் (Website) ஆர்டர் செய்ய: https://www.wateronclick.com/
மொபைல் ஆப்பை (Mobile App) டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wateronclicknew.carevigil
WaterOnClick.com பற்றி மேலும் விரிவான விபரம் அறிய News7 நேர்காணல் பார்க்க:







