நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் மத்திய சிறையில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிறையில் உள்ளவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அமைச்சர் ரகுபதி

இதனையடுத்து, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் இருவரையும் அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, இருவரும் தங்களுக்கு நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஆர். காந்தி

இதனைக் கேட்ட அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் எனவும், அதனைத்தொடர்ந்து மேலும் 30 நாட்கள் நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட நாட்கள் விடுப்பு வேண்டும் எனில் நீதிமன்றத்தையே நாடவேண்டும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.