19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக கிரிக்கெட் அணிக்கு இராமேஸ்வரத்தை சேர்ந்த பெண் தேர்வானது இதுவே முதல் முறையாகும். இராமேஸ்வரம் சம்பை பகுதியை சேர்ந்தவர் ஆதி. இராமநாதசுவாமி கோவிலில் யாத்திரை பணியாளராக தொழில் செய்து வரும் இவருக்கு சாதனை என்ற ஒரு மகள் உள்ளார்., இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த இவர் கிரிக்கெட் விளையாடுவதில் கெட்டிகாரர். கடந்த இரண்டு வருடங்களாக தீவிர கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதன் எதிரொலியாக 19 வயதிற்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ளார் சாதனா.ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு புகழ்பெற்ற இராமேஸ்வரத்தில் விளையாட்டுக்கு என மைதானம் எதுவும் இல்லாததால் தினமும் காலை 4 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் சென்று அங்கு இருக்கக்கூடிய மைதானத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சாதனா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடும்ப வறுமையின் காரணமாக சொந்தமாக கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வாங்கக்கூட முடியாமல் தவித்து வந்த அவருக்கு அவருடைய பயிற்சியாளர் பல்வேறு இன்னல்களுக்கு இடையே அவருக்கு பயிற்சியை கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதோடு இராமேஸ்வரத்தில் சாதனா போன்று பல விளையாட்டு வீரர்கள் உருவாகுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும் என்பது தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வாகிய சாதனாவின் கோரிக்கையாக உள்ளது.